திமுகவினருக்கு அதிர்ச்சி தரக்கூடிய இன்னுமொரு செய்தியும் அடிபடுகிறது. எதிர்கட்சிகள் அணைத்தும் இணைந்து, கருணாநிதிக்கு எதிரான பொது வேட்பாளராக சீமானை நிறத்தலாம் எனும் ஒரு பேச்சும் அடிபடுகிறது. இது தமிழக அரசியற் கட்சிகள் மத்தியில் நடைமுறைச் சாத்திய மற்ற ஒரு யோசனையே. இருப்பினும் அப்படி நடந்தால் அது கலைஞரின் அரசியல் வாழ்வில் கிடைத்த மிகப் பெரும் தோல்வியாகவும், அவமானமாகவும் இருக்கும் என்பதும் உண்மை.